இனி விளம்பரம் செஞ்சா அவ்ளோதான்.. வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பார் கவுன்சில்.!!
lawyers no advertisement bar counsil order
இனிமேல் வழக்கறிஞர்கள் தொழில் தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளதாவது:-
"வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது. சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது.
போஸ்டர், பேனர் என்று விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டாலும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை பாயும்" என்று தெரிவித்தார்.
English Summary
lawyers no advertisement bar counsil order