கனவில் தோன்றிய கடவுள்.. கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த சட்டக்கல்லூரி மாணவி.! - Seithipunal
Seithipunal


சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரக்ஷா என்ற என்ற சட்டக் கல்லூரி மாணவி சிறு வயதிலிருந்து கடவுள் கிருஷ்ணன் மீது அதிக அன்பு கொண்டுள்ளார். அந்த வகையில் கிருஷ்ணர் அடிக்கடி தனது கனவில் வந்து மாலை அணிவிப்பதாகவும், அவரையே தனது கணவராக கருதி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக திருமணம் செய்தால் கிருஷ்ணரை மட்டும் தான் திருமணம் செய்வேன் என கூறிக் கொண்டிருந்த அந்தப் பெண் பெற்றோர் சம்மதத்துடன் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த திருமண விழாவில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Law college student married lord Krishna


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->