இந்தியாவில் அறிமுகமாகும் லாவா ‘அக்னி 4’ ஸ்மார்ட்போன்கள்: அதன் விலை, சிறப்பு அம்சங்கள் உள்ளே..!
Lava Agni 4 smartphones to be launched in India
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த போனில் உள்ள வாயு ஏஐ மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடிட் செய்யவும், கிரியேட் செய்யவும், சுருக்கவும், பதிவு செய்யவும், மொழி மாற்றம் செய்யும் வசதி உள்ளது. லாவா அக்னி 4 போனில் சர்க்கிள் டு சர்ச் அம்சமும் உள்ளது. அத்துடன், 3 ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் இந்த போனில் வழங்கப்படுகிறமை சிறப்பம்சமாகும். இந்த போனின் விலை ரூ.24,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாவா ‘அக்னி 4’ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
6.67 இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 8350 5ஜி ப்ராஸசர்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
50 + 8 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
8ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
5,000 mAh பேட்டரி
66 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் பெறலாம்.
English Summary
Lava Agni 4 smartphones to be launched in India