17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 'லவ் ஜிகாத்' செய்த வாலிபர் தலைமறைவு : மகளிர் எஸ்.ஐ., இருவர் பணியிட மாற்றம்..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமி ஒருவரை கடத்தி, மதமாற்றம் செய்து, திருமணம் செய்து, அந்த சிறுமியை சீரழித்த முஸ்லிம் வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள அந்தநபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை அலட்சியமாக கையாண்டதாக மகளிர் எஸ்.ஐ.,க்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவருக்கு சொந்தமான கட்டடத்தில், முஸ்லிம்பூரை சேர்ந்த அப்துல் கைப் (21), என்ற வாலிபர், மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர், 17 வயதான ஹிந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, கடந்த அக்டோபர் 23-இல் கடத்திச்சென்றுள்ளார். 

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், அந்த சிறுமியின் தந்தை அக்டோபர் 25-இல், புகாரளித்தார். பின்னர், அக்டோபர் 27-இல், இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசியுள்ளனர். அப்போது குறித்த சிறுமியை தந்தையுடன் அனுப்புவதாக எழுதி வாங்கிக்கொண்டு, அப்துல் கைப்புடன் அனுப்பினர். இது குறித்து வழக்கு பதிவு செய்யவில்லை. இதுபற்றி சிறுமியின் தந்தை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் மீண்டும், அக்டோபர் 29-இல் புகார் செய்து, சிறுமியை மீட்டு சென்றுள்ளார். ஆனாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், அக்டோபர் 27 அன்றே, அப்துல் கைப் மற்றும் அவரது பெற்றோர், சிறுமிக்கு பெயரை மாற்றி, 'புர்கா' எனும் உடை அணிவித்துள்ளதோடு, உருதில் எழுதப்பட்ட ரிஜிஸ்டரில் கையெழுத்திட வைத்துள்ளனர். அத்துடன், முஸ்லிம் முறைப்படி அவர்களுக்கு திருமணம் செய்து, கட்டாயப்படுத்தி முதலிரவு நடத்தியதாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இதில் ஈடுபட்ட யார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 19-இல், சிறுமியின் பெற்றோர், வி.எச்.பி., நிர்வாகிகளுடன் சென்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் விசாரிக்க, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார். குறித்த சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்த அப்துல் கைப் மீதுபோலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தற்போது அவர் தலைமறைவாகி விட்டதாக கூறி, தேடி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, காப்பக கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த சூழலில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ., அமுதாவை, கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சி.எஸ்.ஆர்., வழங்கிய எஸ்.ஐ., விஜயவாணியை, பாரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட வி.எச்.பி., நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த விவகாரம் தொடர்பாக, சிறுமியையும், கடத்திய வாலிபர், அவரது பெற்றோரையும் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தான் விசாரித்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two female SIs transferred while the youth who forced a 17year old girl to perform love jihad is absconding


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->