ஜம்மு-காஷ்மீர் நவ்காம் செக்டாரில் தேடுதல் வேட்டை: சீன ஆயுதங்கள்பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் போது சீன கைத்துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நவ்காம் செக்டாரில் உள்ள வனப்பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் குழுவாக இணைந்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த மறைவிடத்தை கண்டறிந்து, சோதனை நடத்தியுள்ளனர். இதன் போது ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் அங்கு இருப்பதை கண்டு அதனை, பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றில் 02 எம் ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 02 சீன கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள், 02 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவத்தினரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chinese weapons seized during search operation in Nowgam sector of Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->