'தவெக விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்; அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம்': அப்பாவு சொல்ல வருவது என்ன..? - Seithipunal
Seithipunal


'தவெ க தலைவர் விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம்' என தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை அளித்துள்ள நிலையில், அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

அத்துடன், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 02 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படவேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்று அப்பாவு குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விளக்கத்தையே நீதிமன்றம் கொடுத்துள்ளதாகவும், வழக்குக்கு தீர்ப்பு கொடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், ஆளுநர் மீதான அந்த வழக்கில் தடை, தவறு என எதையும் நீதிமன்றம் சொல்லவும் இல்லை என்றும், காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையே நீதிமன்றம் சொல்லி உள்ளதாகவும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதனை செய்து கொடுங்கள் என்றுதான் சொல்லி உள்ளார்கள் என்று செய்தியாளர்களிடம் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஆனால், அதனை நிராகரிக்கவில்லை என பாஜக சொல்லி வருகிறது. மத்திய அமைச்சர் நிராகரித்ததாக சொல்கிறார். ஆனால் தமிழக பாஜகவினர் அதனை நிராகரிக்கவில்லை, திருப்பித்தான் அனுப்பப்பட்டுள்ளது என சொல்லிவருகிறார்கள். யார் சொல்வதை நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசால் கொடுக்கப்பட்ட மெட்ரோ திட்ட டி. பி. ஆர்-ல் பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும், அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டி காட்டித்தான் திருப்பி அனுப்பியுள்ளதாக பாஜகவினர் கூறிவருகிறார்கள். இலவசமாக மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு தரவில்லை. 50 சதவீத பங்கை மட்டும்தான் அவர்கள் தருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், சென்னை 02-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 06 ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில்தான், தமிழக அரசு 06-இல்5 பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது எட்ன்றும், ஆனால் ஒரு பங்கு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள் கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதற்குள்ள வட்டி தொகையை மத்திய அரசு கட்டுமா..? என்றும், மத்திய அரசு தமிழக அரசை சிரமப்படுத்தினால் என்ன செய்ய முடியும் என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அனைத்து திட்டங்களையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், ''விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம்"என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Appavu says that Vijay is very mentally affected and should not be put under pressure


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->