அதிரடியில் இறங்கிய சிபிஐ! சிக்கலில் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி சந்திப் கோஷ்!
Kolakatta Santhip Hosh CBI Raid
கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஒன்பதாம் தேதி முதுநிலை மருத்துவ மாணவி (பயிற்சி மருத்துவர்) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ மாணவியின் இந்த படுகொலைக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மாணவி படுகொலை செய்யப்பட்டபோது ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக சந்திப் கோஷ் தொடர்புடைய 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட தகவலின் படி, ஊழல் புகார் தொடர்பாக தற்போது சிபிஐ போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சந்திப் கோஷ் மீதான ஊழல் புகார்களை விசாரணை செய்ய, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், சந்திப் கோஷ் மீதான முதல் புகார்களை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
English Summary
Kolakatta Santhip Hosh CBI Raid