பஞ்சாபில் பெரும் பதற்றம்..காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது.. இணையதள சேவை முடக்கம்.! - Seithipunal
Seithipunal


சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. 

கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில் சமீப காலமாக  பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மீண்டும் காலிஸ்தான் கோஷங்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி வந்த சீக்கிய மத போதகர் அம்ரித்பால் சிங்கை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அந்த வகையில் அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு இன்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீசார் அவரை கைது செய்ய பக்கா ஸ்கெட்ச் போட்டனர்.

அதன்படி, இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்ற போது திரைப்பட பாணியில் அவரை விரட்டிய போலீசார் மேஹத்பூர் என்ற கிராமத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khalistan supporter Amritpal Singh arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->