ஆனையிறங்கல் படகு சவாரிக்கு தடை! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
KeralaHC order to ban aanaiyarangal boat ride
கேரள மாநிலம் மூணாறு ஆனையிறங்கல் படகு சவாரிக்கு கேரள உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் மூணாறு ஆனையிறங்கல் பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் படகு சவாரி நடைபெற்று வந்தது. இந்த படகு சவாரி தேயிலை தோட்டங்கள் வழியாக நடைபெற்றதால் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர்.

இந்த நிலையில் ஆனையிறங்கல் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும், உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைபெறும் படகு சவாரியாலும் நீர்நிலை மாசுபடுகிறது என்பதை மேற்கோள் காட்டி படகு சவாரிக்கு தடை விதிக்க வேண்டுமென கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் படகு சவாரிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
English Summary
KeralaHC order to ban aanaiyarangal boat ride