கேரளா | சுற்றுலா சென்ற இடத்தில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: 

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25). இவர் வியாபாரம் செய்து வருபவர். இவர் தனது சகோதரி தீபிகாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். 

இவர்களுடன் சேர்ந்து மேலும் பத்து பேர் சென்றிருந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு படகு இல்லத்தில் பயணம் மேற்கொண்டனர். படகு இல்ல பயணம் மதியம் முதல் மாலை வரை நீர்ப்பரப்பில் சென்று இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும். 

அதுபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் படகு இல்லம் நிறுத்தப்பட்டது. அப்போது அந்தப் படகு இல்லத்தில் தீபக் காணாமல் போயிருந்தார், படகு இல்லம் முழுவதும் தேடிப் பார்த்தும் தீபக் காணவில்லை. 

இதனால் அவரது சகோதரி இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு தேடிய போதும்  தீபக்கை காணவில்லை.  

இதனால் படகு சவாரி நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி டைவிங் வீரர்கள் தீபகை தேடினர். அப்போது தீபக் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். போலீசார் தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala vacation came youth tragedy


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->