கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி: பிளான் போட்டு பிடித்த போலீசார்!
Kerala officer arrested accepting bribe
கேரளா, பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணியாற்றுபவர் பிஜூ. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதியதாக கட்டப்படவுள்ள வீட்டுக்கு கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார்.
கட்டிட ஆய்வாளர் பிஜூ அனுமதி கேட்டு விண்ணப்பித்தவரிடம் சான்றிதழ் வழங்குவதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விண்ணப்பதாரர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை விண்ணப்பதாரரிடம் கொடுத்து அனுப்பி கட்டிட ஆய்வாளரிடம் தரும்படி தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் அறிவுரைப்படி விண்ணப்பதாரர், அலுவலகத்திற்கு சென்று கட்டிட ஆய்வாளர் கேட்டபடி அவரிடம் ரூ. 25,000 பணத்தை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய கட்டிட ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அலுவலகத்தில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை போலீசார் மீட்டு அவரை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
English Summary
Kerala officer arrested accepting bribe