ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் - தகவலைக் கசிய விட்டதால் கேரளா ஐஜி இடைநீக்கம்.!
kerala IG suspend for train passanger fire case
ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் - தகவலைக் கசிய விட்டதால் கேரளா ஐஜி இடைநீக்கம்.!
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி, ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்மநபர் ஒருவர் சக பயணிகள் மீது தீ வைத்தார். இந்தச் சம்பவத்தில் உயிருக்குப் பயந்து ரயிலில் இருந்து குதித்து மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஷாருக் ஷெய்பி என்பவர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தீவிரவாத நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடும் என்று தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ரகசியமாக வைப்பதற்கு உளவுத்துறையும் அறிவுறுத்தி இருந்தது.

இருப்பினும், இந்த தீ விபத்துச் சம்பவத்தில் ரத்தினகிரி பகுதியில் ஷாருக் ஷெய்பி கைதானது முதல் அவரை கேரளம் அழைத்துவரும் வழியில் போலீஸாரின் வாகனம் இருமுறை பழுதானது வரை உடனுக்குடன் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் புகைப்படத்துடன் தகவல்கள் வெளியாகியது.
இதையடுத்து இது ரகசியமாக விசாரணை செய்ய வேண்டிய வழக்கு. இருப்பினும் தகவல்கள் கசிவது ஏன்? என்று விசாரிக்க கேரள டி.ஜி.பி அணில்காந்த் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி போலீசார் நடத்திய விசாரணையில் கேரள தீவிரவாத தடுப்புப் படையின் ஐ.ஜியாக இருந்த விஜயன் தகவல்களைக் கசியவிட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து ஐஜி விஜயன் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், விஜயன் இந்த வழக்கு குறித்து தகவல்களைக் கசியவிடும் நோக்கத்தில் விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட வண்ணமே இருந்துள்ளார். இந்த நிலையில், கேரள டி.ஜி.பி அணில்காந்த், ஐ.ஜி விஜயனை அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
kerala IG suspend for train passanger fire case