கேரள மக்களே உஷார்: '' ரெட் அலர்ட்'' விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
Kerala heavy rain Red Alert
கேரள மாநிலத்தில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேரள மாநிலத்திற்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலையோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பேரிடர் மீட்பு குழு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால செயல்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Kerala heavy rain Red Alert