முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடம்!
kerala ex cm health update
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல்நிலை தற்போதும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2006-2011 காலகட்டத்தில் முதல்வராக இருந்த அவர், தற்போது 101வது ஆண்டில் காலடி வைத்துள்ளார்.
81 வயதில் முதல்வரான பெருமையை பெற்றவர். மேலும், கேரள சட்டப்பேரவையில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முக்கிய அரசியல் பாதை அவருக்குள்ளது. வயதுமூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியல் செயல்களில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த மாதம் 23-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொந்தரவு, சிறுநீரக கோளாறு, நரம்பியல் குறைபாடுகள் என பலவித சிக்கல்களுக்கே இடையே சிக்கிய அவர், தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு கட்டத்தில் சிறிய முன்னேற்றம் காணப்பட்டும், தற்போது அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய செயல்பாடு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு நியமித்த நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அச்சுதானந்தனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
kerala ex cm health update