பெரும்பாலான தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி போதிய அளவில் இல்லை - டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss DMK Govt MK Stalin Govt school
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்-தலைவர் மருத்துவர் ச. இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "Water Bell" முறை வரவேற்கத்தக்கதுதான். இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் மாணவியருக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க "கட்டாயம் ஒரு தனி கழிப்பறை" - பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு வகுப்பறையில் இருக்கும் போது தண்ணீர் குடிப்பதற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட Water Bell முறை வரவேற்கத்தக்கதுதான். இது மிகவும் சிறிய விஷயம் தான். இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை வசதி போதிய அளவில் இல்லை.
இதனால் மாணவியர் படுகின்ற அவதிக்கு அளவே கிடையாது. அவர்கள் தங்களுடைய இயற்கை உபாதையை கழிக்காமல் அப்படியே தம்பிடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு சென்ற பின் தான் இயற்கை உபாதையை கழிக்கிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக நிறைய பிரச்சினையை சந்திக்கிறார்கள்.
ஆகவே ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் மாணவியருக்கு என தனி கழிப்பறையை ஏற்படுத்தி முறையாக பராமரிப்பு செய்து வந்தால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுவார்கள்.
இவற்றை பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் கட்டாயம் ஒரு கழிப்பறை என்ற நடைமுறையை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss DMK Govt MK Stalin Govt school