போக்ஸோ வழக்கில் எஸ்ஐ கைது! 8 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை வெட்கக்கேடானது - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMK Govt
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர், ஆயுதப்படையைச் சேர்ந்த SI ராஜூ என்பவர் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், அச்சிருமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர் சந்தேகிப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுமி, தனது கையில் ஊசி செலுத்தப்பட்டதாகவும், தான் மயங்கி உறங்கியதாகவும் கூறுகிறார்.
எதற்காக சிறுமிக்கு ஊசி செலுத்தப்பட்டது? எதற்காக சிறுமியை மீட்க வந்த அவரின் தாத்தா தாக்கப்பட வேண்டும்?
8 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை வெட்கக்கேடானது. பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
8 வயது சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் SI ராஜூ மீது POCSO வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தீர விசாரித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.