எண்ணவேண்டும் என்றாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. நாங்க அப்படிதான்.. தம்பதி தடாலடி.! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் காலம் எல்லாம் மாறி, கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல பல வகையான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறான மாற்றங்கள் கேரளாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் பெருமளவு ரசிக்கப்படும் நிலையில், சிலர் அதிக கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படங்களையும் எடுத்து வருகின்றனர். 

சமீபத்தில் கேரளாவைச் சார்ந்த ஜோடியான லட்சுமி மற்றும் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிகள் இருவருக்கும் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கோவிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கார்த்திக் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். லட்சுமி மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பை முடித்துள்ளார். 

இருவரும் தோட்டத்தில் வெள்ளை பட்டு போர்வையில் கட்டித் தழுவியபடி ஒருவரையொருவர் துரத்தும் புகைப்படங்கள் வெளியானது. முதலிரவு காட்சிகளை போல சற்று நெருக்கமாகவே இருந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் பெற்றது.  

இது தொடர்பாக லட்சுமி தெரிவிக்கையில், " துவக்கத்தில் எங்களின் பெற்றோர்கள் கூட இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு நாங்கள் ஏன் இப்படி செய்தோம் என்பதை விளக்கினோம். அவர்கள் இதனை புரிந்துகொண்டு எங்களுக்கு ஒத்துழைத்தனர். 

எங்களின் உறவினர்கள் பலரும் மேலை நாடுகளை போல நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிவித்தனர். பலரும் குடும்ப வாட்சாப்பில் இருந்து வெளியேறினார். இருந்தாலும் நாங்கள் அந்த புகைப்படத்தை அகற்றப்போவதில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வெள்ளை நிற ஆடைக்குள், நாங்கள் மற்றொரு ஆடையையும் அணிந்திருந்தோம். " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Couple Photoshoot Explanation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal