கேரளாவில் தடுப்பூசி போட்டும் ரேபிஸ் நோயால் பலியான சிறுமி! அச்சத்தில் மக்கள்!
kerala child death Dog Bite
கேரளாவில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் தெருநாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி, கடிதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். ரேபிஸ் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது மூன்றாக உயர்ந்துள்ளது.
அண்மையில், கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய நியா பைசல் என்ற சிறுமி வீட்டின் முன்வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு தெருநாயால் கடிக்கப்படார். உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரேபிஸ் தடுப்பூசி தொடங்கப்பட்டு, மூன்று டோசுகளும் அளிக்கப்பட்டது.
இருப்பினும், இறுதி டோசு போடப்படுவதற்கு முன்பே, சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வலிமீறிய அறிகுறிகள் தென்பட்டன. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நியாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், ரேபிஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது.
தடுப்பூசி போட்டபோதிலும் உயிரிழப்பு ஏற்பட்டதால், நியாவின் குடும்பத்தினர் வேதனையுடன் அதிர்ச்சியில் உள்ளனர். அரசு தரப்பில் தெருநாய்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
English Summary
kerala child death Dog Bite