குஜராத் பால விபத்து மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டது - கெஜ்ரிவால் - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி திடீரென அறுந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். 

இதைத்தொடர்ந்து மீட்பு, பணிகள் நடந்து வருகின்ற நிலையில் இந்த விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் நடந்த பால விபத்து ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் பாலம் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத, கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம், ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது ஏன்? உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kejriwal saya Gujarat bridge accident was the result of biggest corruption


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->