300 பாம்பு., ஒரு கிராமம்., மக்களையும், பாம்புகளையும் காப்பாற்றிய பசவராஜ்.! அதே பாம்பால் பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வந்த முதியவர், கையில் பாம்பை பிடித்தவாறு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோடிஹாலா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவர் தனது வாழ்வு காலத்தில் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜ் இடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது மது போதையில் இருந்த பசவராஜ் பூஜாரி பாம்பை பிடிப்பதற்காக புறப்பட., 300 பாம்புகளை பிடித்தவருக்கு இந்த பாம்பு ஒரு விஷயமாக இருக்காது என்று கிராம மக்களும் நம்பினர். அதேபோல அவர் லாவகமாக அந்த விஷ நல்ல பாம்பை பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கு., அலட்சியமாக தனது கையில் பிடித்தவாறு தூக்கி சென்ற பசவராஜை சுமார் ஐந்து முறை அந்த நல்ல பாம்பு கடித்ததாக கிராம மக்கள் சொல்கின்றனர்.

இதில் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஏற்கனவே மது போதையில் இருந்ததால், பாம்பு விஷத்தின் வீரியத்தோடு கலந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேசமயத்தில் பாம்பை விடாமல் கெட்டியமாக பிடித்தவாறு பசவராஜ் பூஜாரி உயிரிழந்ததைக் கண்டு மக்கள் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka snake man dead


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->