கர்நாடகா ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல்... வாலிபனை கைது செய்த போலீசார்...! என்ன நடந்தது?
Karnataka Police arrest youth after bomb threat on train
கர்நாடகா கலபுர்கி மாவட்டத்தில் வாடி சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு, டெல்லியிலிருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து,ரெயில்வே காவலர்கள் வாடி நிலையத்தில் ரெயிலை நிறுத்தி, காவல் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர், சுமார் 4 மணி நேரமாக தீவிர சோதனை நடத்தினர். மேலும், ரெயிலின் 22 பெட்டிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இறக்கிவிடப்பட்டு, முழு பெட்டிகளும் பரிசோதிக்கப்பட்டன.
ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அதுமட்டுமின்றி இது ஒரு புரளி அழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.அங்கு வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் பயணிகள் நிம்மதியடை ந்தனர்.
மேலும், விசாரணையில் அதே ரெயிலில் டெல்லியிலிருந்து குண்டக்கல்லுக்கு பயணம் செய்து கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீப் சிங் (வயது 33) என்பவர் தனது தந்தையின் செல்போன் எண்ணிலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தனது தந்தையுடன் இருந்த கோபத்தில் இப்படி செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்து சித்தாபூர் சிறையில் அடைத்தனர்.
English Summary
Karnataka Police arrest youth after bomb threat on train