இஸ்லாமிய மாணவிகள் இப்படியும் தேர்வு எழுதலாம்: கர்நாடகா அரசு அதிரடி!
Karnataka permit hijab exam centers sparks row
கர்நாடகா மாநிலத்தில் முதல் மந்திரி சீத்தராமையா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கர்நாடக காவல்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 'கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மத்திய அரசு, மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எடுத்த இந்த முடிவு எந்த வகையிலும் தவறு கிடையாது' என தெரிவித்தார்.

இதற்கிடையே ஹிஜாப்புக்கு அனுமதி வழங்கிய காங்கிரஸ் அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்துள்ளன.
English Summary
Karnataka permit hijab exam centers sparks row