கள்ளக்காதலை கைவிட மறுத்து, துடிதுடிக்க அரங்கேறிய கொடூர கொலை.. ஏரியில் பெண் சடலம் விவகாரத்தில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் சீரனஹள்ளி கிராமத்தில் இருக்கும் ஏரியில், கடந்த 1 ஆம் தேதி பெண்ணின் உடல் இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக காவல் துறையினர் சந்தேகித்து, அப்பகுதியை சார்ந்த 3 பேரை விசாரணை செய்துள்ளனர். 

இந்த விசாரணையில், ஏரியில் பிணமாக மிதந்த பெண்மணி சுஷ்மிதா (வயது 26) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கும், சித்ரதுர்கா மாவட்டத்தை சார்ந்த நகராஜு என்ற நபருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 4 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், நகராஜூவுக்கு அங்குள்ள கோடிஹள்ளி பகுதியை சார்ந்த சைலா என்ற பெண்மணியுடன் தொடர்பு ஏற்படவே, இதனை அறிந்த சுஷ்மிதா நாகராஜை கண்டித்துள்ளார். மனைவியின் கண்டிப்பை மீறியும், கடந்த 2 வருடமாக கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை பிரிந்த சுஷ்மிதா, தனது குழந்தைகளுடன் பெற்றோரின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.

கணவர் கள்ளக்காதலை கைவிடாமல் இருந்து வந்ததால் ஹாசன் காவல் நிலையத்தில் ஜீவமிசனம் கேட்டு புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த நாகராஜு, தனது சகோதரர் மோகன குமார் மற்றும் கள்ளக்காதலி சைலாவுடன் மனைவியை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகராஜுவின் பெற்றோர் ஈஸ்வர் ராவ், ஜெயஸ்ரீ உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Hassan Lake girl dead body case husband Affair Murder Confirm By Police


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal