கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்!
Karnataka five die after car falls canal
கர்நாடகா, தும்கூர் மாவட்டம் குங்கரள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரப்பா (வயது 61) கிருஷ்ணப்பா (வயது 60) உள்பட 5 பேர் மைசூரில் நடைபெற்ற அவர்களது உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் நிகழ்ச்சி முடித்துவிட்டு 5 பேரும் மீண்டும் காரில் வீடு திருப்பிக் கொண்டிருந்தபோது நேற்றிரவு பாண்டவபுரம் பகுதியில் முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் காரை திருப்பி உள்ளார்.
அப்போது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்ததில் காரில் இருந்த 5 பேரும் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள், சாலையோரம் தடுப்புகள் இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன என குற்றம் சாட்டினர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Karnataka five die after car falls canal