பனிமூட்டம் காரணமாக நடந்த கொடூர விபத்து: 12 பேர் உயிரை பறித்த சோகம்!
Karnataka car rams truck 12 killed
ஆந்திரா, பாகேபள்ளியைச் சேர்ந்த 13 பேர் ஒரே காரில் இன்று காலை பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர். இன்று காலை அவர்கள் 6 மணி அளவில் கர்நாடகா சிக்கபல்லாபூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடும் பனிப்பொழிவு நிலவியது.
இந்நிலையில் சித்ராவதி காவல் நிலையத்திற்கு முன்பு நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட சிமெண்ட் கலவை லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது கார் ஓட்டுநர் அதிக பனிப்பொழிவின் காரணமாக லாரி நின்று கொண்டிருந்ததை கவனிக்காமல் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதினார்.
அதிவேகமாக வந்த கார் சிமெண்ட் கலவை லாரி மீது மோதியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்து கத்தி கூச்சலிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மேலும் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த கொடூர விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
English Summary
Karnataka car rams truck 12 killed