நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரம்.. தாயும், மகனும் சேர்ந்து பால் ஊத்திய பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹெக்கனஹள்ளி பகுதியை சார்ந்தவர் முகமது கஞ்ஜலி (வயது 52). இவர் வியாபாரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சர்வரி பேகம் (வயது 43). இவர்களுக்கு 22 வயதுடைய ஷாபி உர் ரகுமான் என்ற மகன் இருக்கிறார். 

கடந்த மாதம் 9 ஆம் தேதி, முகமது கஞ்சலி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் தாயும், மகனும் கூறிய நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி முகமது கஞ்சலியின் மாரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்ததில், மனைவி கணவரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதும், இந்த கொலைக்கு மகனும் உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில், சர்வரி பேகம் மற்றும் ஷாபி உர் ரகுமான் ஆகியோரின் வாக்குமூலப்படி, தனிச்சந்திரா பகுதியை சார்ந்த அஸ்தாபி (வயது 21), சையத் சுவேஜ் பாஷா (வயது 23), முகமது சைப் (வயது 20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், " முகமது கஞ்சலி அவ்வப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த தாயும் மகனும் திட்டமிட்டு முகமது கஞ்சலியை கொலை செய்துள்ளனர். கூலிப்படையை சார்ந்தவர்களுக்கு ரூ.4 இலட்சம் பணம் தந்து, அவர்களின் திட்டப்படி உணவில் 6 தூக்க மாதிரியை கலந்துகொடுத்து, மறுநாள் காலையில் தலையணையால் முகமது கஞ்சலியை முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளனர் " என்பது தெரியவந்துள்ளது. தற்போது, தாய், மகன் உட்பட 5 பேரும் சிறையில் உள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore man Murder Mystery Discovered by Police Investigation 2 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal