#வீடியோ || லேடி ஸ்கூட்டி மீது பாய்ந்த பிஎம்டபிள்யூ கார்.! கொடூர விபத்தின் கோர சிசிடிவி காட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில், சாலையில் புயல் வேகத்தில் சென்ற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, எதிரே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி மீது பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம், மங்களூர் நகரத்தில் உள்ள பல்லால்பாக் சந்திப்பில், மதியம் சிக்னலுக்காக நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதில் ஒரு இரண்டு பெண்மணிகள் தங்களது ஸ்கூட்டி வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது எதிர் திசையில் இருந்து புயல் வேகத்தில் வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று, அந்த ஸ்கூட்டி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 


 

இதில் ஸ்கூட்டி ஓட்டி வந்த பெண் இரு கார்களுக்கிடையே நசுங்கிய அந்த கொடூர காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கார் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataaka BMW car accident cctv


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->