தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி வீரேசலிங்கம் பந்துலு பிறந்த தினம்.!!
kandukuri veeresalingam birthday 2022
வீரேசலிங்கம் பந்துலு :
தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது முழுப்பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
இவர் ஜாதி அமைப்புகளை, குழந்தைத் திருமணங்களை, முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார். கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டார்.

இந்தியாவில் விதவைத் திருமணத்தை 1887ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். இவர் எழுதிய ராஜசேகரா சரித்ரா என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.
தெலுங்கு இலக்கியத்தின் மகத்தான கவிஞர், நவீன ஆந்திரத்தின் தீர்க்கதரிசி கந்துகூரி வீரேசலிங்கம் 1919ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
kandukuri veeresalingam birthday 2022