மரகத மாலை, ரத்தின கற்கள் போன்ற ரூ.2 கோடி நகைகள் அபேஸ்...! திருவிதாங்கூர் அரண்மனையில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் அரண்மனையில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் மற்றும் மரகத நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1934-ஆம் ஆண்டு மன்னர் பாலராம வர்மாவால் கட்டப்பட்ட இந்த 3 மாடி பிரம்மாண்ட அரண்மனையில் 150-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற ரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் மாயமானது குறித்து, மன்னர் குடும்பத்தினர் முதலில் ரகசியமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாததால், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கவுரி லட்சுமி பாய் தற்போது பேரூர்க்கடை காவலில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

இந்த அரண்மனைக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மீதே காவலர்களுக்கு பலமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அங்குள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள காவலர்கள், கடந்த சில நாட்களாக அரண்மனைக்கு வந்து சென்றவர்களின் பட்டியலையும் சேகரித்து வருகின்றனர்.

பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட மன்னர் அரண்மனையிலேயே இவ்வளவு பெரிய நகைத் திருட்டு அரங்கேறியிருப்பது கேரளாவையே அதிரவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jewelry Worth 2 Crores Including Emerald Necklaces and Gemstones Stolen Intensive Interrogation Staff Underway at Travancore Palace


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->