'ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்த திரு.ரெனே லென்னக் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்த திரு.ரெனே லென்னக் அவர்கள் நினைவு தினம்!.

இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

 பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.

 இவர் 1808ஆம் காலக்கட்டத்தில் நோயியல், உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

 அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து 'ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்தார்.

 சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் தனது 45வது வயதில் 1826 ஆகஸ்ட் 13 ஆம் தேதி மறைந்தார்.

இந்திய கொடியை வெளிநாட்டு மண்ணில் முதன் முதலில் ஏற்றிய விடுதலைப் போராட்ட வீராங்கனை திருமதி.பிகாஜி காமா  அவர்கள் நினைவு தினம்!.

 பிகாஜி ருஸ்தம் காமா (Bhikaiji Rusto Cama) (செப்டம்பர் 24,  1861 - ஆகஸ்ட் 13, 1936), மும்பை மாகானத்தில் செல்வாக்கு மிக்க பார்சி குடும்பத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

 பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலை போராட்டதற்கு உதவியாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியவர். மேடம் பிகாஜி 3 ஆகஸ்ட் 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம் கே. ஆர். காமாவை மணந்தார். உடல்நிலையை சீர்படுத்த 1902இல் இலண்டனுக்கு சென்றார். இலண்டனில் பல இந்திய தலைவர்களை சந்தித்தார். அங்கிருந்தபடியே இந்திய விடுதலைப் புரட்சியாளர்களுக்கு உதவினார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the memorial day of Mr Rene Laennec who invented the stethoscope


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->