புலிகளை காப்போம்.. இன்று சர்வதேச புலிகள் தினம்..!! - Seithipunal
Seithipunal


சர்வதேச புலிகள் தினம் :

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.

மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி :

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணன்பட்டியில் பிறந்தார்.

இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டம், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, 1930ஆம் ஆண்டு தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் 1978ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

International Tiger Day 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->