'ருத்ராஸ்திரா': இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் இயக்கி சாதனை..!
Indias longest freight train sets record
நாட்டிலேயே மிக நீளமான சரக்கு ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் 354 பெட்டிகள், 07 இன்ஜின்கள் கொண்டுள்ளது. இந்த சரக்கு ரயிலுக்கு 'ருத்ராஸ்டிரா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று சோதனை ஓட்டம் நடந்த இந்த ரயிலை உ.பி.,யின் கன்ஜ்க்வாஜா முதல் ஜார்க்கண்டின் தான்பாத் வரையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று சோதனை ஓட்டத்தில் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ள ரயிலின் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'எக்ஸ்' சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் இந்திய ரயில்வேத்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், உயர்த்துவதிலும் 'ருத்ராஸ்திரா' வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: புதிய சாதனை. 354 பெட்டிகள் கொண்ட 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சரக்கு ரயிலை கன்ஜ்க்வாஜா முதல் கர்வாகா வரையில் இயக்கி கிழக்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. 200 கிலோ மீட்டர் தூரம் ரயில் பயணித்தது. இந்த சரக்கு ரயிலை இயக்க 07 இன்ஜீன்கள் பயன்படுத்தப்பட்டன. என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
Indias longest freight train sets record