போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்முவில் இந்திய வீரர் மரணம்..!
Indian soldier killed in ceasefire violation by Pakistan in Jammu
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்நிலையில், இன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் படுத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு- காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜம்முவில் எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 07 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
Indian soldier killed in ceasefire violation by Pakistan in Jammu