டிக் டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு "ஆப்பு" வைத்தது மத்திய அரசு!  - Seithipunal
Seithipunal


கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இந்திய சீன இடையே உறவில் விரிசல் எழுந்துள்ளது. இதனையடுத்து  தங்கள் ராணுவ படையினை லடாக் பகுதியில் இரு நாடுகளும் குவித்து வருகிறது. இது எல்லைப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இதனிடையே சீன பொருட்களை இந்தியாவில் புறக்கணிக்க வேண்டுமென மக்களிடையே ஒரு பிரச்சாரமாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் இந்தியாவில் சீன பொருள்களுக்கான விற்பனையானது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.  அதேபோல இந்தியாவில் இயங்கிவரும் சீன நாட்டை சேர்ந்த செல்போன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 59 செயலிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக யூசி ப்ரவுசர் ஹலோ ஷார் இட் டிக் டொக்  மொபைல் செயலிகளை  தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian govt banned 59 Chinese apps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->