இந்திய ராணுவம்: பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ...! 'ஆப்ரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கம்...!
Indian Army Video attack on terrorist camps Explanation about Operation Sindoor
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' தொடங்கப்பட்டது.இதில் இன்று அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.மேலும் முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், தாக்குதல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் 'கர்னல் சோபியா குரேஷி' மற்றும் 'விங் கமாண்டர் வியோமிகா சிங்' ஆகியோர் "ஆப்ரேஷன் சிந்தூர்'' எப்படி நடத்தப்பட்டது என்று விளக்கினர்.
மேலும், எந்தெந்த பயங்கரவாத முகாம்களில் எந்தெந்த பயங்கரவாதிகள் குறிவைக்கப்பட்டனர் என்று அவர்கள் விரிவாக எடுத்துத் தெரிவித்தனர்.
சோபியா குரேஷி:
இதில்,சோபியா குரேஷி தெரிவிக்கையில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ''ஆப்ரேஷன் சிந்தூர்'' தொடங்கப்பட்டது. இரவு 1.05 முதல் 1.30 வரை 'ஆப்ரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டன. நாங்கள் சாதாரண குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள் குறிவைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.இந்திய ராணுவத்தால் தாக்குதல் தொடர்பான வீடியோவும் இந்த சந்திப்பில் வெளியிடப்பட்டது.
English Summary
Indian Army Video attack on terrorist camps Explanation about Operation Sindoor