பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா: செய்தியை பகிர்ந்துள்ள இந்திய ராணுவம்..!
Indian Army shares news that US has provided weapons worth 2 billion to Pakistan
ரஷ்யா உடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக வரி விதித்துள்ளார். அத்துடன் மேலும் கூடுதலான வரி விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இந்தியாவை விடுத்து, பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 1954 முதல் 1971 வரையான காலப்பகுதியில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 200 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வழங்கியது தொடர்பாக அப்போது வெளியான நாளிதழின் செய்தியை இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியம் சார்பில் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05இல் வெளியான நாளிதழ் ஒன்றின் நகலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ராணுவ போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் வழங்கப்பட்டது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

அந்த நாளிதழில் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த விசி சுக்லா, பாராளுமன்றத்தில் வங்கதேசம் உருவான பிறகு, பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் ஆயுதங்கள் வழங்கியது குறித்த விவரித்துள்ளமையும் இடம்பெற்றுள்ளது.
அதாவது, 'பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான அமைச்சர் விசி சு்லா ராஜ்யசபாவில் கூறும்போது, பாகிஸ்தான் ஆயுதங்களை குவித்த வருவதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் உருவான பிறகு, பாகிஸ்தானுக்கு கிடைத்த ஆயுதங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை. பாகிஸ்தானுக்கு அதிகளவு ஆயுதங்களை சீனா வழங்கி உள்ளது. 1954 முதல் பாகிஸ்தானுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி உள்ளது.' என்று அந்த செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Indian Army shares news that US has provided weapons worth 2 billion to Pakistan