டிரம்பை எதிர்க்க மாட்டார்...அதானி விசாரணையால் மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன...! - ராகுல் காந்தி அதிரடி
Will not oppose Trump Modis hands tied due Adani investigation Rahul Gandhi takes action
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இதில் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாததால் இந்திய பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும் என்றும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தான் நிறுத்தியதாக தொடர்ந்து டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார். இருப்பினும், இதுவரை நேரடியாக டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிட்டு எந்த கருத்தையும் பிரதமர் மோடி வெளியிடாமல் இருக்கிறார்.
இதுகுறித்து தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.இந்நிலையில், இன்று மோடியை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி:
அதில் அவர் தெரிவித்ததாவது,"இந்தியர்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் அவரை எதிர்த்து பிரதமர் மோடியால் நிற்க முடியாததற்கு காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.மோடி, ஏஏ (அம்பானி, அதானி) மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிவந்து விடும் என்ற அச்சுறுத்தலால் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை.
மேலும், மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Will not oppose Trump Modis hands tied due Adani investigation Rahul Gandhi takes action