ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து.!
17 peoples kuntas law cancelled of armstrong murder case
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இந்த வழக்கில் தீவிரமாக செயல்பட்டு இந்த வழக்கு தொடர்பாக இதுவரைக்கும் 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள், விசாரணைக்கு வந்த போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தரவுக்கான அனுமதி ஆகியவற்றில் நடந்த காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அத்துடன் காவல் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதாவது, கைது செய்யப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. இந்தக் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
17 peoples kuntas law cancelled of armstrong murder case