மத்திய அரசால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடையூறு தருகிறது தமிழக அரசு வளர்ச்சிக்கு...! - சபாநாயகர் அப்பாவு - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக சட்டசபை ''சபாநாயகர் அப்பாவு'' செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்திய வெளியுறவு கொள்கை பலவீனம் ஆகிவிட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை உலகளவில் ஒரு நாடு கூட கண்டிக்கவில்லை. அதுவே நம்முடைய பலகீனம் தானே. சபாநாயகர் தொகுதியிலேயே சட்ட ஒழுங்கு சரியில்லை என்று இன்பதுரை தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் தெரிவித்ததை வைத்து முடிவு எடுக்க முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஒரு இடத்திலும் இல்லை.அதே சமயம் திருப்பூரில் காவல் துணை ஆய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.பல்கலைக்கழக பணியாளர் நியமனம் மத்திய அரசின் விதிப்படி இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

இதுவரை குறை இருந்ததை கலைஞர் பெயரில் அமைக்கும்போது தான் கண்டுபிடித்தார்களா? என்று தெரியவில்லை. நெல்லை மாவட்டத்தில் சிறுவன் சாதி ரீதியாக ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். சட்டப்படி யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் நல்ல முடிவு வரும்.

தமிழக அரசு தென்மாவட்டங்களுக்கு அதிக வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தான் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவர் எந்த காரணத்துக்காக குற்றம் சொல்கிறார் என்று தெரியவில்லை.தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 % ஆகும். இந்த புள்ளி விவரத்தை மத்திய அரசு தான் தந்துள்ளது. எனவே அதை எல்.முருகன் படிக்க வேண்டும். தொழில் தொடங்க வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு நிதி வந்துள்ளது என்று மாநில அரசு தெரிவிக்கும்படி, மத்திய அரசு கேட்டுள்ளது.

ஆனால் வெளிநாட்டில் இருந்து எந்த நிதி வந்தாலும் மத்திய அரசு மூலமாக தான் வரும். அப்படி இருக்க மாநில அரசிடம் ஏன் கேட்க வேண்டும். புள்ளி விவரத்தை எடுத்து மத்திய அரசே பேசலாம். தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ செய்து வருகிறார்கள்.தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதை தாங்க முடியாமல் இதுபோன்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரின் சுற்று பயணத்தால் தமிழகத்தில் எதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government hindering development Tamil Nadu government sabanayagar Appavu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->