பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவம் காட்ட வேண்டும் – சோனியா காந்தி விமர்சனம் - Seithipunal
Seithipunal


காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, இந்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:“பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தை கைவிடுவதாக உள்ளது.இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகள் அல்லது மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையேயான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசு செயல்படுவது போல் தெரிகிறது.

இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி நிலைத்திருக்க முடியாது.
உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதை முயற்சித்ததன் விளைவாக அவமானகரமான தோல்விகள் ஏற்பட்டுள்ளன.

உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு, ஒரு நபரின் புகழ் பாடும் வகையிலோ அல்லது வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கும் விதத்திலோ இருக்கக் கூடாது.அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று பொறுப்பையும் கோருகிறது.

இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீன மக்களுடன் அதன் பற்றின்மையைக் காட்டுகிறது.பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இணைந்துள்ளது.193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

1988 நவம்பர் 18-ம் தேதி இந்தியா பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்தது.நீண்டகாலமாக பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு ஆதரவளித்த நாடு இந்தியாதான்.ஆனால் இப்போது இந்தியா தனது பழைய கொள்கை ரீதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியா மீண்டும் தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.”

 சோனியா காந்தியின் இந்தக் கருத்துகள், பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் பங்கையும், உலக அரசியல் நிலைப்பாட்டையும் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India should show leadership on the Palestine issue Sonia Gandhi criticizes


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->