டெல்லியில் இந்தியா, சீனா ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே எல்லை தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி லடாக்கில் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் 18 ஆவது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கல்பான் தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்திய ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் சீன ராணுவ அமைச்சர் லீ ஷங்பு இருவரும் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எல்லை பாதுகாப்பு தொடர்பாக இந்தியா சீனா இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழியின் படி தீர்வு காணப்பட வேண்டும். எல்லையில் அமைதி நிலவினால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India China Defense Ministers hold talks in Delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->