வாடகை தாயாக வந்த பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக வயோதிகன்..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரப்பா ராஜு (வயது 64). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இவரது மகள்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், இவர் மட்டும் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுக்க விரும்பியுள்ளார். 

இதனையடுத்து முகவரின் மூலமாக சூரப்பாவை பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், வாடகைத்தாயாக இருக்க பெண்ணிற்கு மொத்தமாக ரூ.4.5 இலட்சம் பேசப்பட்டு, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கவும் பேசி முடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சில மாதத்திற்கு பின்னர் பெண்ணிடம் சூரப்பா தகாத முறையில் பேசியுள்ளார். மேலும், வாடகைத்தாய் மட்டுமல்லாது தானுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியும், இதன் மூலமாகவும் தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும் என்று பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். 

இதனையடுத்து பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சூரப்பாவை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Telangana girl sexual torture police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal