மின்சார கம்பியில் கானா பாட்டு போட்டு குத்தாட்டம்..! இறுதியில் அரங்கேறிய விபரீதம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் கேரள மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின் காரணமாக திகைத்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக மக்கள் தங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும்., பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த மழை பிற மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் ஊர்களையும் புரட்டி போட்டது. இந்த நிலையில்., இதனைப்போன்று இராஜஸ்தான் மாநிலத்திலும் நல்ல மழையானது பெய்து வருகிறது. 

rain, south west mansoon, north east mansoon, மழை, தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை,

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா., பில்வாரா மாவட்டங்களில் இருக்கும் பகுதிகளிலும் நல்ல மழையானது பெய்து வருகிறது. அவ்வப்போது திடீரென கனமழை மற்றும் சூறைக்காற்று என்று பெய்து வருவதால்., முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் அவ்வப்போது துண்டிக்கப்பட்டது. 

மழை காரணமாக மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதா என்ற சோதனையை செய்ய., மின்வாரிய பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார கம்பிகள் பாதிப்படையாமல் இருக்கும் பகுதிகளுக்கு அடுத்தடுத்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

உயர் மின் அழுத்த கோபுரம், உயர் மின்னழுத்த கோபுரம், electric tower, high volt electric tower,

இந்த நிலையில்., அங்குள்ள பில்வாரா பகுதியில் நடைபெற்ற மின்சார கம்பிகள் சரிபார்ப்பு பணியில்., பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் கம்பத்தின் மீது ஏறி ஆட்டம் போட்டு மக்களுக்கு வித்தை காண்பித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கம்பியின் மீது குத்தாட்டம் போட்ட ஊழியர்களை கீழே வர சொல்லி கைது செய்து சென்றனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajasthan EB employee played in high volt electric tower when maintenance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->