சினிமா பாணியில் கோர்ட்டிலேயே கொலை.?.! வெடிகுண்டு, கத்தியுடன் 7 பேர் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட்டிற்க்கு பின்புறம் இருக்கும் பெரியபாளையத்தம்மன் பகுதியில் ரவுடி கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த கும்பலை சுற்றி வளைக்க நினைத்தனர். காவல்துறையினரை கண்டதும் அந்த கும்பல் தப்பித்து ஓடி இருக்கின்றது. இருப்பினும் வளைத்து பிடித்து இருக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் நடத்திய சோதனையில் ஒரு நாட்டு வெடிகுண்டு, இரு கத்திகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர் விசாரணை நடத்தினர்.

இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த அன்பு ரஜினி என்ற ரவுடி கொலைசெய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட குற்றவாளியான சோழனை கொலைசெய்ய அன்பு ரஜினியின் நண்பர்கள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

வருகின்ற 20ஆம் தேதி காலாப்பட்டு சிறையில் இருக்கும் ரவுடி சோழனை வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் படுத்த இருக்கின்றனர். அப்பொழுது அவரை கொலை செய்யும் திட்டத்துடன் இந்த கும்பல் களமிறங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு செய்து அந்த ஏழு பேர் கொண்ட ரவுடி கும்பலை நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புள்ள பலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery court gang fight rowdy


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal