கனமழை காரணமாக மீண்டும் முடக்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மீண்டும் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகள் மற்றும் தண்டவாளத்தில் நீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது இதனால் மும்பை, தானே, பால்கரே  ஆகிய பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இந்த நிலையில் மீண்டும் மும்பையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது இதில் குறிப்பாக சயான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே சிக்கிக்கொள்கின்றன. போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது தண்டவாளங்களில் ரயில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மின்சார ரயில் மெதுவாக நகர்கின்றன. மும்பை நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai again heavy rain start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->