பள்ளிவகுப்பறையிலேயே மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை.. அடித்து நொறுக்கிய பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் நாந்தெட் நகரில் இருக்கும் மால்தேக்டி பகுதியில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ - மாணவியர்கள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளியில் சுவப்னில் சுங்குரே என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது போல இருந்துள்ளார். மேலும், அதிக பதற்றத்திற்கு உள்ளானது போல இருந்துள்ளார்.  

இதனை கவனித்த சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த நேரத்தில், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சுவப்னில் பள்ளியில் வைத்து அலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை செய்ததாக தெரிவித்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture,

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சிறுமியை போன்று மேலும் 4 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 

இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை அடித்து நொறுக்கி அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆசிரியரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in maharastra teacher arrest due to sexual torture for girl students


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->