கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; FIFA WC 2026; ஜீ சேனல்கள், ஜீ5 ஓடிடி தளத்தில் லைவ் ஸ்ட்ரீம்..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான 'ரவுண்ட் ஆப் 32' சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 03 வரை நடைபெறுகிறது. காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 04 முதல் 11-ஆம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த தொடரை ஒளிபரப்புவது தொடர்பாக ஃபிபா எந்தவொரு ஒளிபரப்பு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தது. அதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் தொகை சுமார் 320 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரை ஜீ குழுமம் சார்பில் புதிதாக அறிமுகம் செய்துள்ள நான்கு சேனல்களில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜீ நிறுவனத்தின் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் நேரலையில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

இதற்கு முன்பு இந்தியாவில் கால்பந்து உலகக் கோப்பை தொடரை கடந்த 2014, 2018-களில் சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. கடந்த 2022 தொடரை ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இந்த முறை இத்தொடரை ஜீ ஒளிபரப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FIFA WC 2026 to be Live Streamed on Zee Channels and the Zee5 OTT Platform


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->