தவெக ஆட்சியின் தவறுகளை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்''; கனிமொழி எம்.பி...! - Seithipunal
Seithipunal


திமுக எம்.பி. கனிமொழி இன்று தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது “திமுகவையே குறை கூறிக்கொண்டு இருப்பதால் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் தவறுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மத்திய அரசு தாக்கல் செய்த ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, அதைப் பற்றி இப்போது கருத்து எதுவும் சொல்வதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவெக இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. அவர்கள் சரியான முறையில் ஆட்சியை நடத்த வழிமுறைகளை காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவையே குறை கூறிக்கொண்டு இருப்பதால் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் தவறுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், தவெக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து உங்களுக்கே தெரியும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Kanimozhi states that the people will not forget the mistakes of the TVK administration


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->