'தலைவர் விஜய் நல்லாட்சி புரிவார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்'; அமைச்சர் ரமேஷ்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என திருச்சியில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருச்சியை தங்கள் கோட்டை என கூறிக் கொண்டிருந்த கட்சிகள் அனைத்தும் இன்று வாய்மூடி கொண்டன என்றும், சின்னப் பசங்க என்ன செய்து விடப் போகிறார்கள் என்று அவர்கள் தப்பு கணக்கு போட்டு விட்டனர் என்று பேசியுள்ளார்.

மேலும், மக்களுக்காக மக்களின் நலனுக்காக உழைக்கும் ஒருவரை மக்கள் என்றும் அரசனாக பார்ப்பார்கள் என்றும், அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் விஜய் இன்று மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று மக்களுடன் நிற்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இன்னும் இந்த சின்னப் பசங்க என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளும் வகையில், அறுதி பெரும்பான்மையை நிரூபித்து தவெக தலைவர் விஜய் நல்லாட்சி புரிவார் என்றும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ramesh states We will create a situation where there is no opposition party in the Legislative Assembly


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->