இந்தியாவுடன் போர் நடந்தால் பாகிஸ்தான் தோற்றுப்போகும்., இம்ரான்கான்! - Seithipunal
Seithipunal


வழக்கமான முறையில் இந்தியாவுடன் போர் நடந்ததால் பாகிஸ்தான் போரில் தோற்றுப் போக நேரிடும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்க்கு பேட்டியளித்துள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் ஒரு போதும் அணு ஆயுதப் போரை தொடங்காது என தெரிவித்த அவர் அதேசமயம், பீரங்கிகள், துப்பாக்கிகளைக் கொண்டு வழக்கமான முறையில் இந்தியாவுடன் போர் நடைபெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அந்த போரில் தோற்க நேரிடும் எனவும்  அவர் கூறினார். 

எனவே, அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகளுமே மோதிக் கொள்வது, அணு ஆயுத போருக்குத் தான் வழிவகுக்கும் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சரண் அடைய வேண்டும் இல்லையெனில் சாகும் வரை போரிட வேண்டும் என இரு வாய்ப்புகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், சாகும் வரை போரிட வேண்டும் என்ற வாய்ப்பையே தான் பாகிஸ்தான் தேர்வு செய்யும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். 

அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாடு, சாகும் வரை போரிட நேர்ந்தால் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இருந்தாலும் நான் போருக்கு எதிரானவன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 


 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imrankhan says about war


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal